ADDED : மார் 08, 2010 04:17 PM

* நமக்கு சொத்து சுகம் என்று எதுவும் தேவையில்லை. இறைவனின் துணை மட்டும் போதும். அச்சம் என்பதே இல்லாமல் என் நெஞ்சில் அமைதி தவழ வேண்டும்.
* தர்மத்தாலும், கருணையாலும் பெறும் வெற்றியே என்றென்றும் நிலைத்திருக்கும். இதனை அறியாதவர் இயற்கையின் சட்டத்தை அறியாதவராவார்.
* எதனை விரும்புகிறோமோ, அதைத்தான் நம்மால் பெற முடியும். எதை ஆதரிக்கிறோமோ அந்த குணங்களே நம்முள் வளரும்.
* மனதில் உறுதிவேண்டும். பேச்சில் இனிமை வேண்டும். நல்ல நினைவுகள் வேண்டும். நோயில்லாமல் நூறாண்டு வாழும் பாக்கியம் வேண்டும்.
* ஒரு பழக்கம் நம்மிடம் உருவாகிய பிறகு அதை நம்மால் மாற்ற முடியாது. எதிர்கால பலனைக் கருத்தில் கொண்டு நல்ல பழக்கத்தை நாம் ஏற்படுத்துவதே நல்லது.
* மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்து விடுவதே மேலான யாகம். இதனால் மனிதன் பெறவேண்டிய நற்பேறுகள் அனைத்தும் கிடைக்கும்.
* பிறரை வஞ்சிப்பதோ அல்லது பிறர் நம்மை வஞ்சிக்க இடமளிப்பதோ சரியல்ல. உண்மை ஒருவனிடம் இல்லாவிட்டால் அவனது வாழ்க்கையே பொருளற்றதாகி விடும்.
-பாரதியார்